கலவரத்தை தவிர்க்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது – இலங்கை காவல்துறை விளக்கம்..!

இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது துப்பாக்கி நடந்த படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு அறிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் 100 மேற்பட்ட வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கலவரத்தை தடுக்க முற்பட்ட போது காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இது தவிர கொழும்பு புறநகர் அங்கொடை பகுதியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.வன்முறை சம்பவத்தில் சேதமாக்கப்பட்ட வாகனங்களை போலீசார் தடுக்க முற்படும்போது பொதுமக்கள் வாகனங்கள் மீது தீ வைக்க முயற்சித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றது.

இந்த துப்பாக்கி சூடு குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில்  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே நாங்கள் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினோம் தவிர இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்தார். இலங்கையிலிருந்து சில அரசியல் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சில ஊடகங்களில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் ஏதும் உண்மையும் இல்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *