பாகிஸ்தானில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்..! பலி எண்ணிக்கை உயரும் என அபாயம்..!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில்  ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 13 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் இது போன்ற வெடிகுண்டு தாக்குதல் நிகழ்வு அடிக்கடி நிகந்து வருகிறது. இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் கராச்சி பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு மூன்று சீன ஆசிரியர்களைக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்க தக்கது.

தற்போது இரண்டாவது முறையாக கராச்சி நகரம் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்   காயமடைந்த 13 பேர் அருகில் உள்ள  ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு தொடர்பாக  பாகிஸ்தான் அதிகாரிகள் ஆராய்ந்து வந்த நிலையில் காயமடைந்தவர்களில் உடலில்  வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகள் பதிந்துள்ளது என கூறுகின்றனர். இது வெடிக்கும் சாதனங்களில் காணப்படும் இரும்பு துகள்கள் மற்றும்  பால் பேரிங்குகள் சிதறல்கள்  என அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் இந்த குண்டு வெடிப்பின் போது, அருகில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன, அருகே உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் அமைப்பை தளமாகக் கொண்டு செயல்படும் பலூச் லிபரேஷன் ஆர்மி என்ற பிரிவினைவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…