வடகொரியாவில் கொரோனா பாதிப்பு..!!  முழு ஊரடங்கை அறிவித்த அதிபர் கிம் ஜாங் உன்..!!

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து உள்ள நிலையில்  தற்போது ஊரடங்கு அறிவிப்புகள் தளர்ந்து பட்டு வருகிறது. தடுப்பூசி மூலம் இந்த கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

உலகம்  கொரோனா பாதிப்பை மறந்த நிலையில் வடகொரியாவில் முதல் முறையாக நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டில் முழு ஊரடங்கை  அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். 

இதற்கு முன்பு காய்ச்சலால் 6 பேர் இறந்த நிலையில் முதன்முறையாக உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று ஓமிக்ரோன் வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது.  இதற்கு முன்பு கொரோனா தொற்று பரவலை தடுக்க வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதனால் வடகொரியா உணவு பஞ்சத்தில் சிக்கியதாக பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று வடகொரியாவில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மட்டும் வடகொரியாவில் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் ஒரு லட்சம்  பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் அடுத்தடுத்து 3 ஏவுகணை சோதனைகளை வடகொரியா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த மூன்று ஏவுகணைகளும் கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…