உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அமைதிதான் – ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

இந்தியாவில் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இரண்டு மாத ஆன்மிகப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நகரங்களுக்கு சென்ற அவர், அமைதியான வாழ்க்கை முறையை மக்கள் வாழ முற்படவேண்டும்.

கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பிறகு மக்கள் மன அமைதிக்கான தேவையையும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். இந்த நிலையில் அவர் அமெரிக்க எம்.பி.க்கள் குழுவைச் சந்தித்து அவர்களுடன் மனநலப் பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் பற்றி விவாதித்தார்.

அதைத் தொடர்ந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று  அவர் பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்தியாவுக்கு வலிமையான, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி அவசியம். தற்போது இந்தியாவில் எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சியில் சிறந்த தலைவர்கள் இல்லாததால் இந்தியாவில் ஜனநாயகம் மோசமாக உள்ளது என பேட்டி அளித்தார்.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன. எந்த அரசியல் கட்சியும் அரசு நிர்வாக அமைப்புகள் தலையிடுவதில்லை என்பதற்கு மேற்குவங்க தேர்தல் எடுத்துக்காட்டாக கூறலாம். உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அமைதிதான் என்பதையும் போர் அல்ல என்பதையும் உலக நாடுகளுக்கு முதலில் நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் விவகாரத்தில் போர் வேண்டாம் என்றும், அமைதியை கையாளுமாறு ரஷ்யாவிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளார் என அந்த பேட்டியில் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…