மீண்டும் நான்தான் இந்தியாவின் பிரதமர் – பிரதமர் நரேந்திர மோடி..

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள பரு பகுதி மக்களிடையே காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அடுத்து வரும் தேர்தல் குறித்து மக்களிடையே கலந்துரையாடினார். தன்னை சந்தித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் என்னிடம் பேசும்போது  நீங்கள் தான் இரண்டு முறை பிரதமராக ஆட்சி செய்துவிட்டீர்கள் வேற என்ன வேணும் என குறிப்பிட்டதாக கூறினார்.

அவர்கள் எதை குறிப்பிட்டு கூறினார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களின் கருத்துக்கு நான் முற்றிலும் மாறுபட்டவன்  என்பது அவர்களுக்கு தெரியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் தான் தன்னை வடிவமைத்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி அதனால்தான் இதெல்லாம்  நடந்தது  என குறிப்பிட்டார்.

இந்தியா வளரும் இந்த நேரத்தில் நான்  ஓய்வெடுக்கலாம் என்று விரும்பவில்லை நம்முடைய  நலத்திட்டங்கள் முழுவதும் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே எனது கனவு எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  அதற்கு நான் முன்பைவிட மேலும் உத்வேகத்துடன் பணியாற்ற போவதாக அந்த எதிர்க்கட்சி தலைவரிடம் தான் தெரிவித்துள்ளேன் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவல் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என சூசகமாக தெரிவித்துள்ளார் என கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வந்து பல்வேறு திட்டங்கள் குறித்து பேச போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…