பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க..

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக  தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக, இரு தினங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில்  இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். இது குறித்து அவர்  பேசுகையில் என்னுடைய தலைமையிலான புதிய அமைச்சரவை விரைவில் அமையும் என்றும் அந்த அமைச்சரவை அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பதவியேற்ற பிறகு பிறகு உரையாற்றிய ரணில் இலங்கைக்கு பொருளாதார உதவிகள் செய்ய முன்வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவருடன் நெருக்கமான உறவை மேம்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சி செய்வோம் என்றார். மக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம்  போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய  விரும்புகிறேன் என்றார்.

போராட்டக்காரர்கள் விரும்பினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  பொருளாதார நெருக்கடியை கையாளும் வேலையை என்னால் செய்ய முடிந்தால் அதையும் நான் கையாள தயார் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…