டெல்லியில் பயங்கர தீ விபத்து..!! இரங்கல் தெரிவித்த முக்கிய தலைவர்கள்..!

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 27 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தின் மூலம் மேலும் கட்டிடத்தில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட  அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து முதல் கட்ட சோதனையில் கட்டிடத்தின் முதல் உள்ள ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்ததால் இந்த தளத்திலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என கூறுகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கட்டிடத்தில் தீ தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில்  இக்கட்டிடத்தின் உரிமையாளரை மனிஷ் லக்ராவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி என பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…