நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிக்க ஒன்றிய அரசே காரணம் – ப.சிதம்பரம்

உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் மாநாடு தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்  நாட்டில் வேலையின்மை விகிதம் 7 சதவீதம் மேல் ஆக உயர்ந்துள்ளது  இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே  காரணம் என்றார்.

மேலும் நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் இந்த மாநாட்டில் பொருளாதாரம், விவசாயம், விவசாயிகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆலோசிக்க உள்ளதாகவும் கூறினார். பொருளாதார கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உயர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 101 வது இடத்தில் உள்ளது. இவை தவிர ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிகம் உள்ளது. மேலும்  ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை என்பது அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்வதில் ஒன்றிய அரசு தவறி விட்டது என்று சாட்டினார்.

அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இப்போது கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்காமல் இருந்து இருக்கலாம் என்று கூறினார். மேலும் டெல்லியில் முண்டுகா பகுதியில் நேற்று நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *