என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுகிறது – இம்ரான் கான்

பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய இம்ரான் கான் பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். மேலும் தொடர்ந்து பேசிய இம்ரான் கான் ஊடுருவல் இல்லாமல் பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையை கொண்டிருப்பதால்  அமெரிக்கா இதே போன்று இந்தியாவிடம் அதிகாரம் செலுத்த முடியாது என்றார் என குறிப்பிட்டார். தற்போது  பாகிஸ்தானில் நடக்கும் அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசு என விமர்சனம் செய்து செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களால் அமெரிக்காவிடம் சிறிய அளவில் கூட அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்தார். இதை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரியை கடுமையாக விமர்சித்துள்ளார். பிலாவலும் அவரது தந்தை ஆசிப் அலி ஜர்தாரியும் தங்கள் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்காக வெளியுறவு அமைச்சர் பிலாவல் அடுத்த வாரம் எந்த நாட்டிற்குச் செல்ல இருப்பதாக மிக  வன்மையாக தாக்கி பேசியுள்ளார். 

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது இருப்பதாக தெரிவித்த இம்ரான் கான் தான் கொல்லப்பட்டால் அதற்கு பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் என்றார். சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெயர்களுடன் ஒரு வீடியோவை தான் தயார் செய்து வைத்திருப்பதாகவும், எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அந்த வீடியோ வெளியாகும் என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *