புத்த ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் பயணம்..!!

ஒரு நாள் பயணமாக இன்று நேபாளம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேபாள பிரதமர் தியூபா உடனான சந்திப்பை மேற்கொள்ள போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் புத்தர் பிறந்த லும்பினி நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மாயாதேவி ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள இருக்கிறார்.

இதையடுத்து நேபாள அரசின் ஆதரவுடன் இயங்கும் லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள புத்த ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். லும்பினியில் உள்ள சர்வதேச புத்த கூட்டமைப்புக்கு சொந்தமான நிலத்தில் புத்த கலாச்சார மையம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நட்டு தொடங்கி வைக்கிறார்.

இதை தொடர்ந்து நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா நேரில் சந்தித்து நேபாள வளர்ச்சி குறித்து மோடி பேச போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஹெர் பஹதூர் கியூபாவின் அழைப்பை ஏற்று  நேபாளம் செல்ல வந்துள்ளதாகவும் புத்த ஜெயந்தி தினமான இன்று லும்பினியில் உள்ள மாயாவதி ஆலயத்தில் பிரார்த்தனையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தர் பிறந்த புனித தலத்தில் மரியாதை செலுத்துவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு 5வது முறையாக நேபாளம் செல்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *