பெட்ரோல் டீசல் விலை குறைப்பு … கொதித்து எழுந்த அமைச்சர்!!!! 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நேற்று ஒன்றிய அரசு குறைத்து. இதற்கான அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சார் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ருபாயும்  டீசலின் விலையும் 6 ரூபாயுமாக  குறைக்கப்பட்டது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிடும் போது மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரையை குறைக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் “ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை ஏற்றும் போது மாநில அரசுகளுடன் கலந்து பேசி முடிவுக்கு வருவதில்லை. குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 23 ரூபாய்(சுமார் 250%) அதிகரித்தும், டீசல் ஒரு லிட்டருக்கு 29 ரூபாய்(சுமார் 900%) அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு இதில் 50% மட்டுமே குறைத்து விட்டு மாநிலங்களை தங்களுடைய வரியை குறைக்க சொல்வது எப்படி நியாயம். இது தான் கூட்டாட்சி தத்துவமா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.”ஏற்கெனவே கடந்த மாதம் பெட்ரோல், டீசலுக்கான் வரியை மாநில அரசுகள் குறைப்பதில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அப்போதும் அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெட்ரோலுக்கான வாட் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைத்தது. இதன்காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு தோறும் சுமார் 1,160 கோடி ரூபாய் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் மக்களின் நலன் கருதி இதை மாநில அரசு செய்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்கு வரும் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் மாநிலங்களுக்கு அதன்மூலம் வரும் வருமானம் குறைந்து வருகிறது.

ஏனென்றால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான செஸ்(Cess) மற்றும் சர்ஜார்ஜ்(Surcharge) ஆகியவற்றை ஏற்றிவிட்டு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் கலால் வரியை குறைத்து வருகிறது. செஸ்(Cess) மற்றும் சர்ஜார்ஜ்(Surcharge) ஆகிய இரண்டும் மாநில அரசுகளுடன் பகிரப்படாது’ எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *