ஜூன் 13 பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!

அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும், மார்ச் 14 பதினோராம் வகுப்பிற்கும், ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வுகள் துவங்கும் என்றும் அறிவிப்பு…

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ஜூன் 13ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை திட்டமிட்டபடி தொடங்கப்படும். ஜூன் 20ஆம் தேதி 12ம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *