மெக்சிகோ நாட்டில் கடும் சூறாவளி..!! இதுவரை 10 பேர் உயிரிழப்பு..!!

மெக்சிகோ நாட்டில் வீசிய கடும் சூறாவளி காற்றால் இதுவரை பத்து  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தீவிரம் அடைந்த நிலையில் நேற்று அது சூறாவளி புயலாக உருமாறியது.

அஹதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல் மெக்சிகோ உள்ள தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா  பகுதியை கடுமையாக தாக்கியது.கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ct-mexico-earthquake-school-collapse-20170920 - Sri Lanka Tamil News -  Newsfirst | News1st | newsfirst.lk | Breaking

இதன் விளைவாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இந்த சூறாவளி வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவது பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடர் எப்போது இல்லாத அளவு உள்ளது என  பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *