சீனாவில் பயங்கர நிலநடுக்கம்..!! அச்சத்தில் மக்கள்..!!

சீனாவின் சிச்சுவானில் உள்ள யான் என்ற நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 14,000 மேற்பட்ட  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ரிக்டர் அளவில்  6.1 என அளவிடப்பட்டுள்ள இந்த  நிலநடுக்கம் பெரிய தாக்கத்தை உண்டாகியுள்ளது. நகரத்தை உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் நான்கு பேர் இறந்தனர்.  மேலும் 41 பேர் காயமடைந்தனர் என நகரின் நிலநடுக்க நிவாரண தலைமையகம் தெரிவித்திருந்தது.

China Quake Kills Many and Injures Thousands - The New York Times

முன்னதாக, நகரின் நிலநடுக்க நிவாரணத் தலைமையகம், யான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மொத்தம் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது அதன் புதிய புள்ளிவிவரங்களின்படி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

17 கி மீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.4 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.9 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, நிலை-III தேசிய அவசரகால நிலை செயல் படுத்தப் பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *