ஜனநாயகத்திற்காக போராடியவர்களை சீன அரசு மறைக்க பார்க்கிறது – பிளிங்கன்

ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டதன் நினைவாக 33 ம் ஆண்டு அஞ்சலி செலுத்தப் போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

பேச்சுரிமை, ஊழல் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி 1989ம் ஆண்டு சீனாவில் மாபெரும் போராட்டம் தொடங்கியது. அமைதி வழியில் நடைபெற்ற போராட்டத்தை சீன அரசு போராட்டத்தை ஒடுக்க திட்டமிட்டு வந்தது. தியானமென் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

சீன ராணுவத்தின் இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தன. இந்நிலையில் தியானமென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் 33 ம் ஆண்டை ஒட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பளிங்கின் பேசுகையில் ஜனநாயகத்தை வலியுறுத்தி தியானமென் சதுக்கத்தில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சீன அரசு தாக்குதல் நடத்தியது நீங்காத வடுவாக மாறியுள்ளது.

ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமை: ஹாங்காங் மக்களும், சீன அரசும் என்ன செய்ய  வேண்டும்?- Dinamani

இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தைரியத்தை உலகம் தொடர்ந்து நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். தியானமென் சதுக்கத்தில் உயிர்நீத்தவர்களுக்கு எழுப்பப்பட்ட நினைவகங்கள் அப்புறப்படுத்தவும், வரலாற்றை அழிக்கவும் சீன அரசு முயற்சி செய்து வருகிறது.  அது ஒருபோதும் நடக்காது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *