அடுத்து வரும் மாதங்களில் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் கூறுகையில் இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில் தான் உள்ளது.

எனவே இனி தான் மிக மோசமான விஷயங்கள் நிகழப்போகிறது என்றார்.  இதனால் மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகலாம் என எச்சரித்தார். இதன் காரணமாக இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.

இலங்கையில் உணவு தட்டுப்பாடு: "அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு" - மலையக  தமிழர்கள் - BBC News தமிழ்

இதனால் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாறாக நிதி உதவி கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனிடையே போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரை மட்டுமே நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும். ஆனால் நமது நாட்டிற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *