அமெரிக்காவை உலுக்கும் துப்பாக்கி சூடு சம்பவம்..!!  அரசின் அதிரடி நடவடிக்கை..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர் நடப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 240 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இனிமேல் 21 வயது நிரம்பியவர்கள் தான் துப்பாக்கி வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் 18 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Shot grandmother, hinted 'kids should watch out' | How Texas shooting  unfolded | World News - Hindustan Times

இதனைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கைத்துப்பாக்கிகள் சட்டங்களை கடுமையாக மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நியூயார்க் நகரின் ஆளுநர் இந்த சட்டங்களின் தொகுப்பிற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். துப்பாக்கி வாங்குவதற்கு இருந்த வயது வரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது துப்பாக்கி வாங்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த வயது வரம்பு 21-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் மட்டும்  தொடர்ந்து மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *