பதவியை தக்க வைத்துக் கொண்ட பிரதமர்..!! நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி..!!

இங்கிலாந்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோதும் கொரோனா முதல் அலையும்போது நோய் தடுப்பு விதிகளை மதிக்காமல் தனது இல்லத்தில் நூற்றுக்கணக்கான நண்பர்களுடன் போரிஸ் ஜான்சன் மது விருந்தில் ஈடுபட்டார்.

அரசாங்க விதி முறைகளுக்கு எதிராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் ஆளானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய லண்டன் காவல்துறையினர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதித்தனர்.

Boris Johnson faces vote of no confidence in his leadership | Financial  Times

ஆட்சியில் இருக்கும்போது சட்டத்தை மீறி அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற அவப்பெயரும் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்தது. இந்நிலையில் ஆளும் பழமைவாத கட்சியினரே பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான்சனுக்கு ஆதரவாக 211 பேரும், எதிராக 148 பேரும் வாக்களித்தனர். 59 விழுக்காடு பேர் ஆதரவாக வாக்களித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜான்சன் வெற்றி பெற்றார். இருந்தபோதிலும் அடுத்து வரும் தேர்தலில் பழமைவாத கட்சி சார்பில் ஜான்சன் போட்டியிடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *