டபுள் சந்தோஷத்தில் மிர்னாலினி ரவி!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் பொதுவாக பல ஆடிஷன்களில் பங்கேற்று, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த பிறகு தான் கதாநாயகியாக அறிமுகமாவார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் டிக் டாக் போன்று டப் மேஷ் விடீயோக்களை பதிவிட்டு பிரபலமாகி கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து பின்பு கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார்.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அணைத்து கதாநாயகிக்கும் தங்களது திரைப்படம் பண்டிகை நாட்களில் வெளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். முக்கியமாக தீபாவளி பண்டிகையன்று படம் வெளியாகாத என்ற ஆசை பெரிதும் இருக்கும். அந்த அளவிற்கு கோலாகலமான பண்டிகை தீபாவளி திருநாள்.

இன்னும் சில கதாநாயகிகளுக்கு அப்படியான வாய்ப்பு அமையாமல் தான் இருக்கிறது. ஆனால், கதாநாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில், அதுவும் தீபாவளி நாளில் வெளியாகிறது என்றால் அது ஒரு அதிர்ஷ்டம் தான். அந்த அதிர்ஷ்டத்தை திரையுலகில் வந்த ஒரு சில ஆண்டுகளில் அடைந்து இருக்கிறார் மிர்னாலினி ரவி.

இந்த தீபாவளிக்கு நவம்பர் 4ம் தேதி மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடித்த ‘எனிமி, எம்ஜிஆர் மகன்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. தியேட்டர்களில் வெளியாகும் ‘எனிமி’ படத்தில் விஷால் ஜோடியாகவும், ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *