ஜோடியாக தீபாவளி கொண்டாடிய நயன் மற்றும் விக்னேஷ் சிவன்!

தமிழ் திரை உலகில் மட்டுமில்லாமல் தென் இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தற்பொழுது இவர் இந்தியில் நடிகர் ஷாரூக்கானின் படத்தில் நடிக்க உள்ளதாகவும் பல செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரவுடி தான் திரைபடத்தின் நடித்ததில் இருந்து அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

செலக்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் ஹிட் நாயகியாக கோலிவுட் சினிமாவில் பெயர் வாங்கிய நயன்தாரா தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.தற்போது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் விக்னேஷ் சிவனுடன் அவுட்டிங் சென்று வரும் நயன்தாரா சமீபத்தில் மும்பையில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் நேற்று தீபாவளி தினத்தை இருவரும் சேர்ந்து பட்டாசுகள் வெடித்து மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *