பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்

Cool Jeyan

பல வருடங்களாகவே புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் இன்று காலை சற்றுமுன்னர் காலமானார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த். இவரது இயற்பெயர் ஜெயராஜ். பிரபல நடன இயக்குநர்களான ராஜூ சுந்தரம், அவரது சகோதரர் பிரபு தேவாவிடம் துணை நடன இயக்குநராகப் பணியாற்றிவிட்டு 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்களின் நடனம் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவை. அப்பட ரிலீஸுக்குப் பின்னர் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த கூல் ஜெயந்த் சில வருடங்களுக்கு முன் புற்று நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த் மலையாளத்திலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கூல் ஜெயந்த் புற்று நோய் முற்றிய நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை (நவ. 10) சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *