தி மேட் ரிக்ஸ்-4 படத்தின் பிரியங்கா சோப்ரா தோற்றம் வெளியானது!

கெனு ரீவ்ஸ் நடித்து 1999-ல் வெளியான தி மேட்ரிக்ஸ் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. வாக்காவ்ஸ்கி சொல்லவே இல்லை சகோதரிகள் இயக்கி இருந்தனர். இந்த திரைப்படத்தின் அடுத்த பாகங்களாக 2003-ல் தி மேட்ரிக்ஸ் ரிலோடட் என்ற படமும், அதே ஆண்டு இறுதியில் ‘ தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்’ என்ற திரைப்படமும் வெளியாகி வசூல் குவித்தன.

தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ தி மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தின் 4-ம் பாகம் தி மேட்ர்க்ஸ்: ரிசர்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் கெனுரீவ்ஸ் கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர்.இவர்களுடன் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் பற்றி படக்குழுவினர் எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரியங்கா சோப்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லுக்கை பகிர்ந்துள்ளார். இதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தி மேட் ரிக்ஸ் 4-ம் பாகம் படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

Priyanka Chopra looks intriguing in 'The Matrix Resurrections' first look  poster - DNP INDIA

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *