அரசியல் ஆசையில் இருக்கிறாரா ஜிவி? பா ரஞ்சித்துடம் உருவாகும் புதிய கூட்டணி!

ஸ்டியோ ஸ்கிரின் K.E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment மற்றும் C V குமார் இணைந்து வழங்கும் GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”. இந்த திரைப்படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது. இதில் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

பூஜையை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல், CV குமார் , இணைத்து புதுதித்தாக ஒரு திரைப்படத்தை துவங்கி இருக்கிறார்கள். இந்தக்கூட்டணி எனக்கு ரொம்ப பிடிச்ச கூட்டணியா இருக்கு.

இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஜீவி பிரகாஷ் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு என்டோட படங்கள் ரொம்ப பிடிக்கும் என்று கூறுவார். ஒவ்வொரு முறையும் என் படங்கள் வெளியாகும் போதும் படத்தை பற்றி நிறைய பேசி இருக்கிறோம். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், கூடிய விரைவில் ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திகொண்து இருக்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *