இன்ஸ்டாகிராமில் புஷ்பா டீசரை வெளியிட்ட நடிகர் அல்லுஅர்ஜூன்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் பூஷ்பா. வழக்கமாக அழகான மாஸ் ஹீரோவாக நடித்து வந்த அல்லு அர்ஜுன் முதன் முதலில் வேறு கெட்டப்பில் நடித்து இருக்கும் திரைப்படம் தான் புஷ்பா திரைப்படம். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பாகத் பாசில் இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். ராஷ்மிக மந்தானா புஷ்பா திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அல்லு அர்ஜூனுடன் ஜோடி சேர்கிறார்.

சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த திரைப்படத்தின் முதல் லுக், போஸ்டர் என இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் பாடல்களும் வெளியாகின.முதல் 4 சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடுவதாக புஷ்பா படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 5 ஆவது சிங்கிள் பாலில் சமந்தா நடனமாடுகிறார்.

மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 17- ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். சமீபத்தில் படக்குழுவினர் படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அறிவித்தபடியே புஷ்பா படத்தின் டீசர் வெளியானது. அதை நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.