எதற்கும் துணிந்தவன் முதல் சிங்கள் வீடியோ இன்று வெளியாகிறது!

ஜெய்பீம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அனுமோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் இணைந்து வினை ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ். பாஸ்கர் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இமான் இசை அமைத்திருக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்தப் பாடலை இயக்குனரும், எழுத்தாளருமான விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளனர். இமான் இந்த பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்று இந்த பாடல் வெளியாகும் என்று அறிவித்ததால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *