டான் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இன்று வெளியாகிறது!

டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் டான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். சிபிச் சக்கரவர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்ஷன் மற்றும் எஸ்கேப் ரெடக்ஷன் இணைந்து டான் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.. இந்த திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

மேலும் இதற்கு முன் டான் திரைப்படத்தின் பல போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இன்ஸ்டாகிராமில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இன்று மாலை 06.00 மணிக்கு வெளியாகும் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லோகேஷ் வரிகள் எழுதி இருக்கிறார். அனிருத்டான் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இன்று வெளியாகிறது! இந்தப் பாடலை பாடியுள்ளார். ஜலபுல ஜங் என்ற இந்த பாடலில் ஒரு சிறிய வீடியோ பதிவையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் முழு பாடல் இன்று மாலை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *