கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் !

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்கிரம். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கடாரம் கொண்டான். விக்ரம்-61 திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விக்ரம் முதல் முறையாக ப. ரஞ்சித்துடன் இணைகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க உள்ளதாக படக்குழுவினரே அறிவித்தும் இருந்தனர்.

ஒருநாள் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது பல நடிகர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில்தான் நடிகர் கமலஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலமடைந்து பணிக்கு திரும்பினார். தற்போது சியான் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவரின் அறிவுரைப்படி தன்னை தன் வீட்டிலேயே தனிமைப் படுத்தி உள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

விக்ரம் கடைசியாக கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் அஜய் ஞானமுத்து கோப்ரா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மஹான் என பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது நடிகர் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *