22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விண்டேஜ் விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருபபவர் தளபதி விஜய்.ஆரம்ப காலத்தில் தளபதி விஜய் ஹிட்டானத்திற்கு முக்கிய காரணம் என்றால் அது காதல் திரைப்படங்கள் தான். காதலுக்கு மரியாதை,லவ் டுடே,குஷி, என காதல் படத்தின் லிஸ்டை சொல்லிட்டே போகலாம்.

இந்த மாதிரி காதல் திரைப்படங்களில் விஜய் தன்னுடைய இயல்பான நடிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருப்பார்.அப்படிப்பட்ட தளபதியின் விண்டேஜ் படத்தை தற்போது கேரளா ரசிகர்கள் வெளியிட உள்ளனர். விஜய்,சிம்ரன் நடிப்பில், இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளிவந்த படம் “துள்ளாத மனமும் துள்ளும்”.இந்த படத்திற்கு இசை எஸ்.ஏ.ராஜ்குமார்,இவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் செம ஹிட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை இந்த திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த படம் வெளியான நாளான டிசம்பர் 19 ஆம் தேதியில் மீண்டும் கேரளாவில் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பின் போஸ்ட்டரை நடிகை சிம்ரன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *