எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வலிமை படத்திற்கு செல்லுங்கள்-வினோத்!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் வலிமை. போனி கபூரின் பேவியூ நிறுவனம் தயாரிப்பில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்க உள்ளது. இந்த நிலையில்தான் இயக்குனர் வினோத் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி இருக்காது என்றும் ரசிகர்களை தங்களது எதிர்பார்ப்புகளை விட்டு விட்டு படத்தை பார்க்க வருவது நல்லது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தான் அஜித்துடன் என்கிற அடுத்த படம் வலிமை படம் மாதிரி இல்லாமல் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *