பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜோடியாக வெளியேறும் வருண் மற்றும் அக்ஷரா!

பிரபல விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். பிக் பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரியங்கா, ராஜு,சிபி, பவனி, தாமரை, அக்ஷரா, வருண், அமீர், சஞ்சீவ் என இவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட போட்டியை நெருங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் கடந்தவாரம் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்தார்கள். அதனால் கடந்த வாரம் பிக் பாஸ் பாசப்போராட்டமாகவே சென்றது.

போட்டியாளர்களின் சொந்தங்கள் வந்து போட்டியாளர்களுக்கு பல டிப்ஸ், ஹிண்ட்ஸ் என பல அறிவுரையையும் வழங்கினார்கள். இதில் போட்டியாளர் அமீர் தன் குடும்பம் வரவில்லை என்று ஏங்கி கொண்டிருந்தார். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அமீரின் குடும்பத்தினரும் வந்து ஒரு மாஸ்ஸான கூட்டத்தை போட்டு சென்றார்கள். மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அவர்கள் தனியாக கன்பஸ்ஷன் அறையில் போட்டியாளர்களுக்கு ரகசியமாக அறிவுரையை வழங்கினார்.

போட்டியாளர்களுக்கு கிரிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அந்த பரிசில் பிரியங்கா எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டறார். மேலும் இன்றைய ப்ரோமோவில் பிக் பாசில் 2 எலிமினேஷன் என்று கமல் அவர்கள் கூறுகிறார். சமூக வலைத்தளங்களில் வருண் மற்றும் அக்ஷரா பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜோடியாக வெளியேறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *