‘கபேள’ தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய ஜிவிஎம்!

மலையாள திரையுலகில் 2020-ம் ஆண்டு ஓ.டி.டி. தலத்தில் வெளியான திரைப்படம் ‘கபேள’. இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தென் இந்திய முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட இந்த திரைப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ராங் நம்பரின் மூலம் காதல் வலையில் விழும் பெண், காதலனை நேரில் சந்திக்க நகரத்திற்கு செல்லும் போது ராய் என்ற அடையாளம் தெரியாதவரை சந்திக்க நேரிடும். அப்போது நிகழ்ப்பவை தான் ‘கபேள’ படத்தின் கதை.

இயக்குனர் முஸ்தப்பா இயக்கத்தில், விஷ்ணு வேணு தயாரிப்பில், அண்ணா பேன், ரோஷன், ஸ்ரீநாத் பாஷி போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வாங்கியுள்ளார். விரைவில் இந்த திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *