தமிழில் ரீமேக் செய்யப்படும் ஜூன் திரைப்படம்!

2019 ஆம் ஆண்டு ரஜிஷா விஜயன் நடிப்பில மலையாளத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றப் படம் “ஜீன்” . இந்தப்படம் ஜீன் என்ற பெண்ணின் பள்ளி மற்றும் கல்லூரிகால காதல்களை பற்றிய பசுமையான நினைவுகளை கதையாகக் கொண்டிருந்தது. மலையாளத்தில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும்,தமிழ் ரசிகர்களாலும் அதிக அளவில் பார்க்கப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது.


இந்த நிலையில் தற்போது இந்தப் படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.இதிலும் ரஜிஷா விஜயனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மலையாளத்தை போன்று தமிழிலும் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ள்ளது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய அஹமது கபீர் தமிழிலும் இயக்கவுள்ளார்.

ஒளிப்பதிவு ஜிதின செய்கிறார்,படத்தொகுப்பு லியோ பால்,இஃப்தி இசையமைக்கின்றார். வசனம் மற்றும் பாடல்கள் நவீன் முத்துசாமி எழுதுகிறார். ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *