மீண்டும் அஜித்துடன் இணையும் தபு!

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் தற்போது வெளியாவதற்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த படம் அடுத்தமாதம் இறுதியில் அல்லது மார்ச் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இது அஜீத்துக்கு 61-வது படமாகும். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. அஜித்தின் அறுபத்தி ஒரு ஆவது படத்துக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல இந்தி நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது.

படத்தின் கதைக்கு வயதான கதாநாயகி தேவை என்பதால் தபுவை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்திலும் வயதான கதாநாயகி வித்யாபாலனின் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டாயிரத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *