நீ ஒரு குப்ப….ஆகாஷ் வாணி டீசர் வெளியானது!

சீரியல்களில் நடித்து, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல், லிப்ட் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கவின் அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் ஊர்குருவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் விக்னேஷ் சிவனுக்கும் அசோசியேடாக பணிபுரிந்து வந்த அருண் இயக்குகிறார்.

திரைப்படங்களை நடிப்பதை தாண்டி நடிகர் கவின் தொடாந்து ஆல்பம் பாடல்களிலும், வெப் சீரிசுகளிலும் நடித்து வருகிறார். ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடரை புதுமுக இயக்குனர் ENOC இயக்குகிறார். காதல் கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரீஸில் கவினுக்கு ஜோடியாக ரேபா ஜான் நடித்துவருகிறார். சிறு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வந்தது.

விரைவில் தொடரை பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘ஆகாஷ் வாணி’ தொடரின் டீசரை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரர் வெளியிடுகிறார் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். தற்போது அறிவித்தபடியே ‘ஆகாஷ் வாணி’ டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இரு கல்லூரி நபர்களின் காதல் கதையை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்க பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.