மகேஷ் பாபுவின் புதிய படத்தின் ரீலிஸ் தேதி வெளியானது!

இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘சர்க்காரு வாரி பாட்ட’. இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபுவுற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து வெண்ணில கிஷோர், ராஜா சேகர், சுப்பா ராஜு போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஜி. மகேஷ் பாபு என்டேர்டைன்மெண்ட், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மைத்திரி மூவி மேகர்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். எஸ். தமன் ‘சர்க்காரு வாரி பாட்ட’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாக தயாராக உள்ளது.

முதலில் இந்த திரைப்படம் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகும் என்று பல செய்திகள் பரவின. தற்போது இந்த திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வருகிற மே மாதம் 12-ஆம் தேதி உலகமும் முழுவதும் ‘சர்க்காரு வாரி பாட்ட’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…