சமந்தா ஆடிய ஐட்டம் பாடலுக்கு கருத்து தெரிவித்த பிரியாமணி!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிபில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் முன்னணி கதாநாயகியான சமந்தா ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார். ஐட்டம் பாடலுக்கு சமந்தா ஆடியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அனைவரும் இந்த பாடலை பற்றியும், சமந்தா பற்றியுமான தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். தற்போது சமந்தா பற்றி நடிகை பிரியாமணி கருது ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை பிரியாமணி தமிழில் பருத்திவீரன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்காக இவர் தேசிய விருதையும் வாங்கினார். தற்போது இந்தியில் வெளியான பேமிலி மேன் வெப் தொடரிலும் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் பிரியாமணி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் சமந்தாவை பற்றி பேசி உள்ளார். அதில், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருகின்றன.
நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் ஒட்டுமொத்த படத்தையும் தங்களின் தோள்களில் சுமந்துவருகின்றனர். நடிகை நயன்தாரா நெற்றிக்கண் போன்ற சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவின் போக்கு மாறி வருகிறது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. புஷ்பா படத்தில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் ஆடியது அவரது தைரியமான முடிவு. அவர் மிகவும் நன்றாக செய்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.