நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் தொடர்ந்து இந்தியா நடிகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் தான் கமல் ஹாசன் , ஜெயராம், சத்யராஜ், மம்முட்டி, துல்கர் சல்மான், அருண் விஜய், விஷ்ணு விஷால், வடிவேல், சுரேஷ் கோபி, திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஷோபனா, மீனா, லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். சிலர் தங்களது வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மீண்டும் தமிழ் நடிகரும், ராதிகாவின் கணவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மருத்துவர் ஆலோசனை படி வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டதாகவும் கூறி உள்ளார். மேலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிப்படைந்து வருகிறார்கள் என்று அவர்களே தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். பின்பு, குணமடைந்ததும் தனிமையில் எவ்வாறு வருந்தினார்கள், கஷ்டப்பட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது சரத் குமாருக்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.