இனி அந்த சிரிப்பை நிறுத்தாதே….என கதாநாயகியிடம் கூறும் சிவகார்த்திகேயன்!

லைகா புரொடக்ஷன் மற்றும் எஸ்கேப் ரெடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘டான்’. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து இருக்கிறார். சிபி இயக்கம் இந்த படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழுவினர் இரு தினங்களுக்கு முன்பு தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன் டான் திரைப்படத்தின் பல போஸ்டர்கள், பாடல்கள் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் லோகேஷ் எழுதிய ஜல புல ஜங் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.டான் படத்தின் மூன்றாவது சிங்கள் விடியோவான ‘BAE’ பாடல் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை போஸ்டருடன் படக்குழு தெரிவித்திருந்தனர்.
நேற்று இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவையும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். BAE கண்ணால திட்டிடாத…ஏன்னா bae பலசெல்ல மறந்து போயாச்சே…bae இனி அந்த சிரிப்பை நிறுத்திடாத என்று துவங்கும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதி உள்ளார். ஆர்.கே ஆதித்யா இந்த பாடலை பாடியுள்ளார். ரொமான்டிக் பாடலான இந்த பாடலில் பிரியங்காவின் தோழியாக குக் வித் கோமாளி சிவங்கியும், சிவகார்த்திகேயனின் தோழனாக மிர்ச்சி விஜய் நடித்திருக்கிறார்.