விக்னேஷ் சிவன் படத்தின் அசத்தலான அப்டேட் வெளியானது!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வர தயாராகி உள்ள திரைப்படம் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது.

இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் அனிருத். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கை பற்றியுள்ளது என்றும், சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்து என்றும் பல தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதே போல் இந்த திரைப்படம் பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர் பார்க்க பட்டது, ஆனால் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….