இந்தியில் விறுவிறுப்பாக உருவாகும் ‘ராட்சசன்’ திரைப்படம்!

2018-அம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் ராட்சசன். 75 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியா முழுவதும் இந்த திரை படம் வெளியானது. கிரைம் திரைப்படமாக உருவாகி உள்ள திரை படம் பல மொழிகளில் ரீமேக் செய்வதகாக கூறப்பட்டது.
தமிழில் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து அமலா பால், அபி ராமி, முனீஷ்காந்த், காலி வேன்கட், வினோதினி போன்ற பலர் நடித்திருந்தார்கள். ‘ராட்சசன்’ ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹிந்தியில் இந்த திரைப்படத்திற்கு மிஸ்சன் சிண்ட்ரெல்லா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் வேதா, சூரரை போற்று போன்ற தமிழ் படங்களையும் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.