சிம்புவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தொடர்ந்து நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இன்று சிம்பு தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிம்புவின் பிறந்தநாளை ஒட்டி, இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். மேலும் சிம்பு நாடிபில் உருவாகி வரும் ‘பாத்து தல’ படத்தின் கிலிம்ஸ் விடியோவை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த கிலிம்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போது சிம்புவிற்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது. சிம்பு தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு துபாய் நாட்டு அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கௌரவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாக் கலைஞர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.