அம்மாவானதை பற்றி மனம் திறந்த நடிகை அமலா!

பிரபல நடிகை அமலா, புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதல் திருமணம் செய்ததார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் ‘கணம்’ என்ற படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அம்மா பாசத்தை சித்தரிக்கும் வகையில் ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதுபற்றி நடிகை அமலா பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் மாறாதது என்பதை சொல்வதற்காகவே அம்மாபாடல் உருவாக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தை செய்துள்ளனர். முதன்முறையாக இந்த பாடலைக் கேட்டபோது இதமாக, மென்மையாக இருந்தது.

டைரக்டர் ஸ்ரீ கார்த்திக் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவும் என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்பின் போது அந்தப் பாடலை துண்டு துண்டாக தான் கேட்டோம். தற்போது பாடல் வெளியான பிறகு அதை முழுமையாக கேட்க முடிந்தது. அம்மா வேடத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த பாடல் அனைவரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாக கருதுகிறேன். இந்த படத்தில் நடித்து முடிக்கும்வரை அனைவருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அதை மிகவும் மதிப்புமிக்க விஷயம் என்று கருதுகிறேன். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…