தளபதி ஃபேன்ஸ் தயாரா?… இன்று மாலை காத்திருக்கிறது ‘பீஸ்ட்’ விருந்து!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின. படத்தைப் பற்றி அவ்வப்போது லேட்டஸ்ட் அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட் ட்விட்டரில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பாக இது இருக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதையடுத்து ட்விட்டரில் #BeastmodeON என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.