கமலுடன் நடித்த பிரபல நடிகர் மரணமடைந்தார்!

தமிழில் கமலஹாசனுடன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரபல இந்தி நடிகர் பிரவீன்குமார். இவர் நேற்று மாலை மரணமடைந்தார். இவர் நடித்த பீம்பாய் கதாபாத்திரம் மக்கள் மனதில் பெரிதும் பேசப்பட்டது. ஷாஹன்ஷா, லோஹா, கொகபத் கேதுஷ்மன், சிங்காசன், ஐபர்தஸ்த் உள்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.
பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் பீமன் ஆக நடித்து மேலும் பிரபலமானார். பிரவீன்குமார் சிறந்த தடகள வீரர் ஆவார். உயரிய அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். விளையாட்டு சாதனை படைத்ததற்காக எல்லை பாதுகாப்பு படையில் துணை கமாண்டன்ட் பதவியும் அவருக்கு கிடைத்தது.
சமீபகாலமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார். பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்து வந்த சில நாட்களாக உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 74. பழனிக்குமார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.