காலில் விழுந்த விஜய் சேதுபதி….வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வர தயாராகி உள்ள திரைப்படம் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார், அனிருத்.

இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கை பற்றியுள்ளது என்றும், சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்து என்றும் பல தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அறிவித்திருந்தனர். அறிவித்த படியே தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் ஹீரோவின் கதையை நகைச்சுவை பாணியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….