வா தலைவா …. வா தலைவா!! மீண்டும் வருகிறது சக்திமான்

பொதுவாகவே நமக்கு  சூப்பர் ஹீரோ என்றாலே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவர்களுக்குத் தான் பிரத்தியோகமான சக்தி இருக்கும். உதாரணமாக சூப்பர் ஹீரோக்களுக்கு பறக்கும் சக்தி இருக்கும், எவ்வளவு கனமான  பொருளானாலும் அவர்களால் எளிதில் தூக்க முடியும், மிகவும் வேகமாக ஓட முடியும். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு  சூப்பர் ஹீரோவாக வலம் வந்தவர் சக்திமான்.

இந்தியாவில் வந்த முதல் சூப்பர் ஹீரோ தொடர் சக்திமான் தான். தீயவர்களை அழித்து உண்மையை நாட்ட சக்திமான் வருவார் என்று குழுந்தைகள் மனதில் மிக  ஆழமாக பதிய வைத்தவர்.1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடரை பார்க்க ஞாயிற்று கிழமைகளில் டிவி முன் தவறாமல் அட்டடென்ஸ் போட்டு விடுவார்கள், இப்போது நடுத்தர வயதில் இருக்கும் அப்போதைய குட்டீஸ்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது.இதை தொடர்ந்து விரையில், ‘சக்திமான்’ தொடர் ஒளிபரப்பாகும் என இந்த தொடரில் நடித்த ஹீரோவும்… தயாரிப்பாளருமான முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார். இந்த செய்தி 90 ஸ் கிட்ஸ்சுக்கு  ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த கால குழந்தைகளும் இது போன்ற தொடர்களை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் வரவுள்ள இந்த தொடரை சோனி பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….