திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வந்து கொண்டிருந்த நிலையில் இந்தியா முழுவதும் தொடர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டு வந்தது. அந்த வகையில் திரையரங்குகளுக்கு 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே தமிழக அரசு அறிவித்தது. பொது இடங்களில் செல்வோர்கள், பொழுதுபோக்கு இடங்களில் செல்வோர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவித்திருந்தார்கள்.

2022-ஆம் ஆண்டின் புத்தாண்டின் பொழுது பலவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று தான் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுபதிப்பார்கள் என்று அறிவித்தனர். இதனால் திரையரங்குகளில் வெளியாக விருந்த ஆர்.ஆர்.ஆர்., வலிமை,டான், காது வாக்குல இரண்டு காதல் போன்ற பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் ரீலிஸ் தேதியை மாற்றிவைத்தனர்.

தற்போது கொரோனா பரவல் படி படியாக குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக குறைந்து வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளும் நடத்த துவங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவான அணைத்து திரைப்படங்களின் ரீலிஸ் தேதி மார்ச், ஏப்ரலில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து தற்போது தமிழகதில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…