விஜய் டெக்னிக்கை கையில் எடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்பிரைஸ்!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் நல்ல அங்கீகாரம் பெற்று, ஆஸ்கர் வரை சென்றது ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக சூர்யா விரைவில் மற்றொரு சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. கலாநிதி மாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, வினய், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தெலுங்கு டப்பிங்கை நடிகர் சூர்யாவே பேசி வருகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
எப்போதுமே பெரிய நடிகர்கள் தங்களது பிற மொழி டப்பிங்கை டப்பிங் ஆர்டிஸ்ட்களை வைத்து தான் பேச வைப்பார்கள், ஆனால் விஜய் எப்போதுமே தெலுங்கு டப்பிங்கை தான் தான் பேசுவாராம். அதே டெக்னிக்கை கையில் எடுத்துள்ள சூர்யா, எதற்கு துணிந்தவன் படத்திற்கான தெலுங்கு டப்பிங்கை தானே பேசி வருகிறாராம். சூர்யாவிற்கு ஏற்கனவே தெலுங்கில் எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இந்த செய்தி அனைவரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.