கவலையில் வாணி போஜன்…காரணம் இதுதான்!

சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ விக்ரம் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘மஹான்’ இந்த திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக சிம்ரன், வாணி போஜன், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் இணையத்தில் வெளியானது. இது விக்ரமின் 60-வது படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில்தான் படம் வெளியான பிறகு ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. படத்தில் வாணிபோஜன் நடித்த காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. சிம்ரன் மற்றும் சில பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் வாணி போஜனுக்கு என்ன ஆச்சு? என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

படத்தில் விக்ரமுக்கு இன்னொரு ஜோடியாக வாணிபோஜன் நடித்திருந்தார். படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் சில காட்சிகளை வெட்டுவதற்கு படக்குழுவினர் ஆயத்தமானார்கள். முக்கியமான காட்சிகளை வெட்ட முடியாது என்பதால் வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மொத்தமாக நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீக்கப்பட்ட அந்தக் காட்சிகளையும் ‘ அன்சீன்’ காட்சியாக இணையத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் தான் நடித்த காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது குறித்த வாணிபோஜன் வருத்தத்தில் உள்ளார் என்றும், இது தொடர்பாக நண்பர்கள், உறவினர்களிடம் ஆதங்கப்பட்டு கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.