தொடர்ந்து சர்சையில் சிக்கும் ஷில்பா ஷெட்டி!

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பிரபலமானார். பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருந்தார். ஷில்பா ஷெட்டியின் சகோதரி சமித்தா ஷூட்டிங் சில இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பர்ஹத் அம்ரா என்ற தொழிலதிபர், தன்னிடம் வாங்கிய கடனை ஷில்பா ஷெட்டி திருப்பி தர மறுப்பதாக மும்பை ஜுஹூ போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்தர் ஷெட்டி, என்னிடம் 2015-ல் ரூ.21 லட்சம் கடனாகப் பெற்று ஷில்பா ஷெட்டியுடன் இணைந்து நடத்திய நிறுவனத்தில் முதலீடு செய்தார். இந்தத் தொகையை 2017-ல் திருப்பித் தருவதாக கூறினார். ஆனால் சுரேந்தர் மறைவுக்குப் பிறகு அந்த தொகையை ஷில்பா ஷெட்டியும், அவரது சகோதரி மற்றும் தாய் ஆகியோர் திருப்பித் தர மறுக்கிறார்கள்.

இதனால் அதிரமடைந்தவர்கள், இதுகுறித்து மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் ஷில்பா ஷெட்டி, ஷமிதா ஷெட்டி மற்றும் அவர்களின் தாய் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. தற்போது இந்த செய்தி பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.